ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது - பரத் அருண்

‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான்’ என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறினார். #BharatArun #Dhoni #RishabhPant
பரத் அருண்
பரத் அருண்
Published on

மொகாலியில் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முக்கியமான கட்டத்தில் ஸ்டம்பிங்கை கோட்டை விட்டார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதுகுறித்து இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் நேற்று கேட்டபோது ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான். விக்கெட் கீப்பிங் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மேலும் கேப்டன் விராட் கோலிக்கு தேவையான நேரத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இப்போது பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 4, 6 மற்றும் 7 என்று பல வரிசைகளிலும் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அது மட்டுமின்றி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசுகிறார். இது அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்’ என்றார். #BharatArun #Dhoni #RishabhPant

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com