ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை வீழ்த்தியது பெங்களுரூ எப்.சி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 19-வது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தி பெங்களுரூ எப்.சி. முதல் இடத்திற்கு முன்னேறியது.
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் இன்று மாலை நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி, பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொண்டது.

பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணியும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா அடங்கும்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதி நேரத்தில் கோல் ஏதும் விழவில்லை. இரண்டாவது பாதிநேர ஆட்டம் தொடங்கிய 47-வது நிமிடமே பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் இந்த கோல் பெங்களூரு அணியின் வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் பெங்களூரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணியை தோற்கடித்தது. 4-வது லீக்கில் ஆடிய பெங்களூரு எப்.சி. அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com