திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டரை ஏமாற்றிய பெங்களூரு பெண்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை பெங்களூரு பெண் ஏமாற்றிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டரை ஏமாற்றிய பெங்களூரு பெண்
Published on

திருக்கோவிலூர்:

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கள்ள நோட்டு, தங்கம் மற்றும் கார் மோசடி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவருடன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உளவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டருக்கு அந்த பெண் குறைந்த விலையில் ஒரு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களுக்குள் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் சப்- இன்ஸ்பெக்டரை அந்த பெண் ஏமாற்றி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்று குரல் பதிவு வாட்ஸ்அப்பில் வெளியானது.

அதனை தொடர்ந்து மீண்டும் அதே வாட்ஸ்அப்பில் விரிவான பேச்சு அடங்கிய ஆடியோ பதிவும் வெளியிடப்பட்டது.

இந்த 2 தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தொலைபேசி உரையாடல் நடந்தது பற்றியும், அந்த உரையாடலில் பேசிய பெண் யார்? என்பது குறித்தும், இவர்களுக்குள் நடந்த பரிவர்த்தனைகள் எது மாதிரியானவை என்பன குறித்தும், இந்த மோசடி செயலில் காவல்துறையை சேர்ந்த யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த உரையாடல் சம்பவம் காவல்துறையினரிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com