கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்ற காண்டிராக்டர் மயங்கி விழுந்து பலி

புதுவை கடற்கரையில் நடை பயிற்சி சென்ற காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
பலி
பலி
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை கல்லார் தெருவை சேர்ந்தவர் முகமது அயூப். இவர் சுல்தான் பேட்டையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை நசீர் அகமது (வயது 60). சிவில் காண்டிராக்டர். இவர், தினமும் புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் நேற்று மாலை நசீர் அகமது கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றார். அப்போது டூப்ளே சிலை பூங்கா அருகே நடை பயிற்சி மேற்கொண்டபோது நசீர் அகமது திடீரென மயங்கி சாய்ந்தார். 

உடனே அங்கிருந்தவர்கள் போலீசார் உதவியுடன் நசீர் அகமதுவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நசீர் அகமது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் காரணமாக நசீர் அகமது மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நசீர் அகமது மகன் முகமது அயூப் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com