ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

’அயோத்தி விவகாரத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றி-தோல்வியாகவும் பார்க்க கூடாது. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதே முதன்மையானது.

எப்படிப்பட்ட பிரச்சனையையும் சட்டத்தின் நடைமுறையின்படி தீர்த்துக்கொள்ள முடியும் என்பதாலும், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, நமது நீதித்துறையின் தொலைநோக்கு போன்றவற்றை மீண்டும் நிலைநாட்டியதாலும் சட்டத்தின்  முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உணர்த்துவதாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com