தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்: சட்ட ஆணையம் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், அதன் மாநில கிரிக்கெட் சங்கங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. #BCCI #RTIAct #LawCommission
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்: சட்ட ஆணையம் பரிந்துரை
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், அதன் மாநில கிரிக்கெட் சங்கங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

மற்ற தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் கிரிக்கெட் வாரியத்தையும் ஏன் அதற்கு உட்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ள சட்ட ஆணையம், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் இருந்து ரூ.2,168 கோடிக்கு வரிச்சலுகை பெற்றிருப்பதையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் அரசு சாரா அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்திய வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய சீருடையை அணிவதையும், ஹெல்மெட்டில் அசோகா சக்கரம் பொறிக் கப்பட்டு இருப்பதையும் சட்ட ஆணை யம் சுட்டிகாட்டியுள்ளது. எனவே கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப் படை தன்மையுடன் இருப்பதற்கு அதை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டியது அவசியமான ஒன்று என்று பரிந்துரையில் தெளிவுப்பட கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் பிறகு இந்திய அணியின் வீரர்கள் தேர்வு விவகாரம், பங்கேற்கும் போட்டிகள், வருமானம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். #BCCI #RTIAct #LawCommission #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com