

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை எம்.பி.டி ரோடு நகராட்சிக்கு உட்பட்ட டிரான்ஸ்போர்ட் நகரில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை லாரி உரிமையாளர்கள் குத்தகைக்கு எடுத்து உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட லாரிகளிலிருந்து மர்மநபர்கள் பேட்டரிகளை திருடிச்சென்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டிரான்ஸ்போர்ட் நகரில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லாரிகளை பார்க்க அதன் உரிமையாளர்கள் சென்ற போது அதில் இருந்த பேட்டரிகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.