வத்தலக்குண்டு அருகே மணல் திருடிய டிராக்டர்கள் பறிமுதல்

வத்தலக்குண்டு அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் திருடிய டிராக்டர்கள் பறிமுதல்
மணல் திருடிய டிராக்டர்கள் பறிமுதல்
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி செம்மண் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விராலிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தோட்டத்தில் 2 டிராக்டர்களில் செம்மண் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து வத்தலக்குண்டு போலீசார் செம்மண் திருடியவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் விராலிப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி (வயது 33), சந்தானம் (40) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களது டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com