தேனி மாவட்டத்தில் பரவலாக மழை - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை - கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. வரத்து 270 கன அடியாகவும், திறப்பு 52 கன அடியாகவும் உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 36.61 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாகவும் உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 41 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

பெரியாறு 3.4, தேக்கடி 2.8, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 18, வைகை அணை 5.4, மஞ்சளாறு 4, மருதாநதி 22, கொடைக்கானல் 28.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் 26 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com