ரஞ்சி டிராபி: தமிழக அணியுடனான போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் பரோடா 254/8

தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், பரோடா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்துள்ளது.
ரஞ்சி டிராபி: தமிழக அணியுடனான போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் பரோடா  254/8
Published on

வதோதரா:

ரஞ்சி டிராபி தொடரின் 7-வது சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று (25-ம்தேதி) தொடங்கியது. வதோதராவில் நடக்கும் சி பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி, பரோடா அணியுடன் மோதியது.

இப்போட்டியில், டாசில் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் கெதார் தேவ்தர், ஆதித்யா  வாஹ்மோட் ஆகியோர் களமிறங்கினர். தேவ்தர் 17 ரன்களிலும், வாஹ்மோட் 19 ரன்களிலும் விக்னேஷ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த விஷ்னு சோலங்கி 20 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் கெட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தீபக் ஹூடா 24 ரன்னில் சாய்குமார் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு முனையில் ஸ்வப்னில் சிங் உறுதியுடன் போராட, எதிர்முனையில் களமிறங்கியவர்கள் தமிழக வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தர். மிதேஷ் பட்டேல் (5), அதித் ஷேத் (2), துருவ் பட்டேல் (10) ரன்னில் தொடர்ந்து அவுட் ஆகினர்.

பரோடா 176 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஸ்வப்னில் சிங் - கார்த்திக் காகடே ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. காகடே 42 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்துள்ளது. ஸ்வப்னில் 94 ரன்களுடனும், வகேலா 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தமிழக பந்துவீச்சில் கே.விக்னேஷ், கவுஷிக் தலா 2 விக்கெட்களும், முகமது, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com