ஊத்தங்கரையில் வங்கி போலி அதிகாரி கைது

வங்கி அதிகாரி என்று கூறி போலி அடையாள அட்டையுடன் வாலிபர் ஒருவரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரையில் வங்கி போலி அதிகாரி கைது
Published on

சிங்காரப்பேட்டை:

வங்கி அதிகாரி என்று கூறி போலி அடையாள அட்டையுடன் வாலிபர் ஒருவரை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் உசேன் (வயது 27). கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேடதட்டைக்கல் பகுதியைச் சேர்ந்தவர். 

இவர் செல்போன் கடை உரிமையாளர் ஒருவரிடம் வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.13 ஆயிரம் பணம் கேட்டார். அவரது செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த செல்போன் கடை உரிமையாளர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். 

போலீசார் வந்து விசாரித்த போது அந்த வாலிபர் பாங்கி அதிகாரி அல்ல என்றும், அவர் அதிகாரியாக நடித்து மோசடி செய்ய முயன்றவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து போலி அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com