வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு- 2 கொள்ளையர்கள் கைது

திருவொற்றியூர் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு- 2 கொள்ளையர்கள் கைது
Published on

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் சுவாதி. வங்கி ஊழியரான இவர் வீட்டில் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் டிவி. உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் (22), லிங்குசெட்டி தெருவை சேர்ந்த அடில்மாசன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு டி.வியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com