ஆசிய லெவன் - உலக லெவன் இடையே இரண்டு டி20: வங்காளதேசம் ஏற்பாடு

ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட வஙகாளதேசம் கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்
Published on

வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஷேக் முஜிபுர் ரஹ்மன். இவரது 100-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆசிய லெவன் அணிக்கும், உலக லெவன் அணிக்கும் இடையில் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது.

போட்டிகள் நடக்கும் தேதியை முடிவு செய்துவிட்டதாக கூறும் வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன், அடுத்த வருடம் மார்ச் 18-ந்தேதி மற்றும் 21-ந்தேதிகளில் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com