சசிகலாவுடன் தினகரன் 4-ந் தேதி சந்திப்பு

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை வருகிற 4-ந் தேதி தினகரன் சந்திக்க உள்ளார்.
சசிகலாவுடன் தினகரன் 4-ந் தேதி சந்திப்பு
Published on

பெங்களூர்:

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசியை அவரது மகன் விவேக், மகள் ‌ஷகிலா, மருமகன் கார்த்திகேயன் மற்றும் விவேக்கின் மனைவி ஆகிய 4 பேர் நேற்று சந்தித்து பேசினர்.

மாலை 4.20 மணிக்கு சிறை வளாகத்திற்குள் சென்ற அவர்கள் மாலை 5.20 மணிக்கு வெளியே வந்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சசிகலாவை சந்திக்க வந்த தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவர் வருகிற 4-ந் தேதி மாலை சசிகலாவை சந்திக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி பிரமுகர்ளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com