பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு
Published on

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க நேற்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி மற்றும் நடராஜனின் சகோதரர் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

அவர்கள் மதியம் 12.30 மணிக்கு சிறைக்குள் சென்றனர். அங்கு அவர்கள் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அவர்களின் குடும்ப விஷயங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டி.டி.வி.தினகரன் உள்பட அனைவரும் மதியம் 2.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, நிருபர்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேட்டி காண முயன்றனர். ஆனால், அவர் பேட்டி கொடுக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com