ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையினர் நடத்திய என்வுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். BandiporaEncounter
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையினர் நடத்திய என்வுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #BandiporaEncounter

X

Maalai Malar
www.maalaimalar.com