களக்காடு அருகே வாழை தோட்டத்தில் முதியவர் பிணம்

களக்காடு அருகே வாழை தோட்டத்தில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு அருகே வாழை தோட்டத்தில் முதியவர் பிணம்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது77) கூலி தொழிலாளி. இவருக்கு பேச்சியம்மாள் (67) என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவருக்கு மனநிலை பாதிப்பு இருந்துள்ளது.

இதையொட்டி அவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி முதல் சுப்பையாவை காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் நேற்று சவளைக்காரன்குளத்தை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் பிணமாக கிடந்தார். பிணம் அழுகி, துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுப்பையா உடல்நலகுறைவால் இறந்தாரா? வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com