மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்க புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்க புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்
மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்க புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
Published on

புல் இனத்தை சேர்ந்த மூங்கில் நமது நாட்டில் மரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் வனப்பகுதி தவிர்த்த இடங்களில், குறிப்பாக கிராமங்களில் மூங்கிலை வெட்டி வர்த்தக ரீதியாக பயன்படுத்த அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இதைத்தொடர்ந்து மரங்களின் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்தது.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு கடந்த மாதம் 23-ந்தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இந்தநிலையில் இது தொடர்பான புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அண்மையில் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com