பக்ரீத்தையொட்டி கடைகளில் கூட்ட நெரிசல் -விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.
கடை வீதியில் குவிந்த மக்கள்
கடை வீதியில் குவிந்த மக்கள்
Published on

சென்னை: 

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கடைகளில் வியாபாரம் களைகட்டி உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் முக்கிய வர்த்தக மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாகத் திரண்டனர். 

பல்வேறு கடைகளில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் திரண்டதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாதக் கடைகளுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். 

பொது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு விதிமுறைளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com