செங்கம் அருகே பேக்கரியில் தீ விபத்து- பணம் பொருட்கள் எரிந்து நாசம்

செங்கம் அருகே நேற்று இரவு பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டதில் பணம், பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
செங்கம் அருகே பேக்கரியில் தீ விபத்து- பணம் பொருட்கள் எரிந்து நாசம்
Published on

செங்கம்:

திருநெல்வேலியை சேர்ந்தவர் திலக்குமார். இவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து எறையூர் பஸ் நிலையத்தில் பேக்கரி மற்றும் ரெஸ்ட்டாரண்ட் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பேக்கரியில் இருந்து நேற்றிரவு திடீரென புகை வந்தது. தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேக்கரி ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ மளமளவென பரவியது. இதையடுத்து செங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தண்டராம்பட்டில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. ஆனால் பேக்கரி பொருட்கள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த நெய், ஆயில், ரவை, மைதா உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

மேலும் பேக்கரி பொருட்கள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களும் மேலும் வேறு ஒரு கடை திறக்க கடையில் வைத்திருந்த பணமும் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com