அன்னூர் அருகே பேக்கரியில் தீப்பிடித்து 5 சிலிண்டர்கள் வெடித்தது

அன்னூர் அருகே இன்று அதிகாலை பேக்கரியில் தீப்பிடித்து 5 சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
வெடித்த சிலிண்டர்களை படத்தில் காணலாம்.
வெடித்த சிலிண்டர்களை படத்தில் காணலாம்.
Published on

அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பேக்கரி நடத்தி வருபவர் பழனிச்சாமி. இவர் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இன்று அதிகாலை கடையின் வெளிப்புறத்தில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் தார்பாயில் திடீரென தீ பிடித்தது. மெல்ல மெல்ல தீ பரவிய நிலையில் பின்னர் முழுமையாக கடைக்குள்ளும் பிடிக்க தொடங்கியது.

இதனையடுத்து மளமளவென பரவிய தீ பேக்கரியில் பரவிஅங்கு வைக்கபட்டு இருந்த உணவு பொருட்கள் மற்றும் அருகில் இருந்த மளிகை கடையின் உள்ளே இருந்த மளிகை பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் தீயில் முழுமையாக எரிந்து நாசமானது.

மேலும் பேக்கரியில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த 5 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் பயங்கர வெடிசத்தத்துடன் வெடித்து சிதறியது.

இரவு நேரம் என்பதால் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்வ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் முழுமையாக தீயை அனைத்து கட்டுப் படுத்தினர். தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com