பாகூரில் ரவுடியை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்

பாகூரில் ரவுடியை சுற்றி வளைத்து தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூரில் ரவுடியை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்
Published on

பாகூர்:

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). ரவுடியான இவர் மீது லாஸ்பேட்டை மற்றும் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதற்கிடையே ராஜேஷ் கடந்த 2 ஆண்டுகளாக பாகூர் முருகன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இங்கும் ராஜேஷ் ரவுடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். பாகூர் போலீஸ் நிலையத்திலும் இவர் மீது 3 வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைமணி என்பவருடன் ராஜேஷ் சேர்ந்து கொண்டு ஒரு வீட்டை சூறையாடினார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ் மீது அதே பகுதியை சேர்ந்த பட்டு என்ற சதாசிவம் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பாகூர்- பரிக்கல்பட்டு ரோட்டில் ராஜேஷ் தனியாக நிற்பதாக சதாசிவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சதாசிவம் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சென்று ராஜேசை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ராஜேஷ் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்கு பதிவு செய்து சதாசிவம் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com