உலக பேட்மிண்டன் போட்டி - காலிறுதியுடன் வெளியேறினார் சாய்னா

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியுடன் வெளியேறினார். #WorldBadmintonChampionships2018 #Saina
உலக பேட்மிண்டன் போட்டி - காலிறுதியுடன் வெளியேறினார் சாய்னா
Published on

நான்ஜிங்:

24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில்  ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இதில் கடுமையாகப் போராடிய சாய்னா நேவால், 6-21, 11-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதியுடன் வெளியேறியது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் ஜெங் சிவெய்- ஹூவாங் யாகிகோன் ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடி, 21-17, 21-10 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். #WorldBadmintonChampionships2018 #Saina

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com