

காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், கனடாவின் ரசெல் ஹோண்டரிச்சை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-8, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் பிவி சிந்து கனடாவிடன் பிரிட்னி டாமை எதிர்கொண்டார். இதில் 21-14, 21-17 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் எச்எஸ் பிரனோய் இலங்கை வீரரை வீழ்த்தியும், ஸ்ரீகாந்த் கிதாம்பி 2-0 என சிங்கப்பூர் வீரரை வீழ்த்தியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் ராங்கிரெட்டி சாத்விக்- அஸ்வினி பொன்னப்பா ஜோடியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் ராங்கிரெட்டி சாத்விக்- சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.