அனாதையாக கிடந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டிய நடிகை

சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் கால்வாயில் அனாதையாக கிடந்த குழந்தையை மீட்ட நடிகை அக்குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டினார். #Suthanthiram
அனாதையாக கிடந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டிய நடிகை
Published on

வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார்.

நேற்று காலை குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

குழந்தை கிடந்த கால்வாயின் மேற்பகுதி சிமெண்ட் சிலாப்பால் மூடப்பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சின்னத்திரை நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.

இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொதுமக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

தற்போது அந்த குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது.

நேற்று மாலை குழந்தையின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று கேட்டறிந்தார்.

குழந்தை வீசப்பட்ட கால்வாய் அருகே உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனை வளசரவாக்கம் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், குழந்தை வீசப்படும் நேரத்தில் பெரிய வேன் ஒன்று கால்வாயை மறைத்தப்படி வந்து நிற்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com