கரும்பு தோட்டத்தில் குழந்தை நரபலி? - கை, கால் வெட்டப்பட்டு கிடந்த கொடூரம்

மன்னார்குடி அருகே கரும்பு தோட்டத்தில் குழந்தை கை, கால்கள் வெட்டப்பட்டு கிடந்தது. அக்குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரும்பு தோட்டத்தில் குழந்தை நரபலி? - கை, கால் வெட்டப்பட்டு கிடந்த கொடூரம்
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு காலனித் தெருவில் வசித்து வருபவர் சோமு. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 5 ஏக்கர் கரும்பு தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தின் வழியாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்ற சிறுவன் நடந்து சென்றான். அப்போது கரும்பு தோட்டத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைகயின் கை, கால்கள் தனித்தனியாக கிடந்ததை பார்த்தான்.

அதன் அருகில் சில நாய்கள் சுற்றி கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் கரும்பு தோட்ட உரிமையாளர் சோமுவிடம் தெரிவித்தான்.

இது குறித்து திருமக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடல் உறுப்புகளை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கை, கால் துண்டிக்கப்பட்டு கிடந்த குழந்தை யாருடையது? குழந்தையின் மற்ற உறுப்புகள் எப்படி காணாமல் போனது. கரும்பு தோட்டத்தில் சுற்றி திரிந்த நாய்கள் குழந்தையின் உடலை இழுத்து வந்ததா?

குழந்தையின் தலை உள்ளிட்ட உடல்கள் கிடைக்கவில்லை என்பதால் நரபலியா? அல்லது கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com