இங்கிலாந்து தொடரில் இருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விலகல்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். #ENGvPAK #BaburAzam
இங்கிலாந்து தொடரில் இருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விலகல்
Published on

லண்டன்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது. அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஆடிய ஹரிஸ் சொகைல் 39 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஆசாத் சபிக்கும், பாபர் அசாம் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி எண்ணிக்கை உயர்ந்தது.

ஆசாத் சபிக் 59 ரன்னில் அவுட்டாகினார். நிதானமாக ஆடிய பாபர் அசாம் 68 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார்.  

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 110 ஓவரில் எட்டு விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்போட்டியின் போது பாபர் அசாம் கையில் பந்து தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அசாம் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். #ENGvPAK #BaburAzam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com