சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி: இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்

அடையாறில் உள்ள காந்தி நகர் மைதானத்தில் நடைபெற்ற பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.
டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரா. கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.
டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரா. கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.
Published on

சென்னை:

சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப் மைதானத்தில், பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கியது.

இதில் 18 வயதுக்கு உட்பட்ட 160 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 97 பேர் ஆவர். 63 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இதன் ஆண்கள் பிரிவு ஒற்றையர் இறுதிப்போட்டியில் கோவை வீரர் பூபதி சக்திவேலுவும், பெங்களூர் வீரர் எரிக் நிகிலனும் மோதினார்கள். இதில் எரிக் நிகிலன் 6-1, 4-6, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இரா.கண்ணன்ஆதித்தன் பரிசு வழங்கினார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் மராட்டியத்தைச் சேர்ந்த அகன்ஷா நிதுரோ மற்றும் வைஷ்ணவி அதுகல் ஆகியோர் மோதினார்கள். இதில் அகன்ஷா நிதுரோ 6-3, 4-6, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு மாலை முரசு நாளிதழ் மற்றும் மாலை முரசு தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com