நாகோர்னா-காராபாக் பிராந்தியத்தில் முக்கிய நகரத்தை கைப்பற்றியது அசர்பைஜான்

நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் நேற்று கைப்பற்றியது.
அசர்பைஜான்
அசர்பைஜான்
Published on

பாகு:

நாகோர்னா-காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான், ஆர்மேனியா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ரஷியா தலையிட்டு 2 முறை சண்டை நிறுத்தங்களை ஏற்படுத்திய நிலையில் இரண்டுமே தோல்வியில் முடிந்தன. அதன்பின்னர் அமெரிக்கா தலையீட்டில் உருவான 3-வது சண்டை நிறுத்தமும் தோல்வி அடைந்தது. நாகோர்னா காராபாக் பிராந்தியத்தில் இருதரப்பு ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாகோர்னா காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் நேற்று கைப்பற்றியது. அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

ஆனால் இதனை ஆர்மேனியா ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. சுஷா சூசா நகரில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக ஆர்மேனியா ராணுவம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com