அய்யம்பேட்டை அருகே பாம்பு கடித்து மாணவி பலி

அய்யம்பேட்டை அருகே பாம்பு கடித்து மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள்ஆனந்தி (வயது 13). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் சென்ற ஆனந்தியை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தியை அவரது குடும்பத்தினர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com