தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல் செய்த வாலிபர் கைது

அயோத்தியப்பட்டணம் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல் செய்த வாலிபர் கைது
Published on

சேலம்:

சேலம் அயோத்தியப்பட்டணம் பகுதியில் தனியார் பைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடனாக வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(வயது 27) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசூல் செய்த பணத்தை அவர் கட்ட வில்லை என தெரிகிறது.

இது தொடர்பாக நிறுவனத்தின் உதவி மேலாளர் ரவிசங்கர் நிறுவனத்தின் கணக்கு, வழக்குகளை ஆய்வு செய்தார். ஆய்வில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 185 ரூபாய் கட்டாமல் ஸ்டீபன் ராஜ் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. அதற்குரிய ரசீதும் அவர் வாடிக்கையாளர்களிடம் வழங்கவில்லை.

இது குறித்து ரவிசங்கர் சேலம் டவுன் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கைது செய்து பணத்தை கையாடல் செய்த வாலிபர் ஸ்டீபன் ராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com