அயனாவரம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் மாயம்

அயனாவரம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயனாவரம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் மாயம்
Published on

அம்பத்தூர்:

அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மகள் ஜான்சிராணி (23). புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், அயனாவரத்தை சேர்ந்த ஜோஸ்வாவும் காதலித்து வந்தனர்.

இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு நேற்று மாலை ஐ.சி.எப்.பில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ஜான்சிராணி பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com