அயனாவரத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து மரணம்

அயனாவரத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அயனாவரத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து மரணம்
Published on

அம்பத்தூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் மணவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (45). மாநகர அரசு பஸ் கண்டக்டர்.

நேற்று இரவு சென்னை திரு.வி.க.நகரில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம் சென்ற மாநகர பஸ்சை டிரைவர் கோபிநாத் ஓட்டினார். இதில் காஜாமைதீன் கண்டக்டராக பணிபுரிந்தார்.

இரவு 10.30 மணி அளவில் இந்த பஸ் அயனாவரம் சயானி பஸ்நிறுத்தம் அருகே சென்றது. அப்போது கண்டக்டர் காஜாமைதீன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். வலிப்பும் ஏற்பட்டது.

உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் கோபிநாத், மயங்கி விழுந்த கண்டக்டர் காஜா மைதீனை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காஜா மைதீனை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஓடும் பஸ்சில் கண்டக்டர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com