அவினாசி பல்பொருள் அங்காடியில் பணம் திருடியவர் கைது

அவினாசி பல்பொருள் அங்காடியில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அவினாசி:

அவினாசி புதிய பஸ் நிலையம் எதிரில் பல்பொருள் அங்காடி உள்ளது. இந்த அங்காடியின் மேற்கூரை மீது முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலாளி பெரியசாமி மற்றும் சிலர் அந்த ஆசாமியை பிடித்து அவினாசி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் கோத்தகிரி பகுதியை சேர்ந்த முத்துவேல் (45) என்பதும், பல்பொருள் அங்காடியில் ரூ.3 ஆயிரம் திருடியது தெரியவந்தது.

இது குறித்து அவினாசி போலீசார்வழக்கு பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com