ரெயில் நிலையம் அருகே நின்ற ஆட்டோ திருட்டு - போலீசார் மடக்கி பிடித்தனர்

ஈரோடு ரெயில் நிலையம் அருகே நின்ற ஆட்டோவை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் மரப்பாலம் ரோடு ஐந்தாவது வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது78). இவர் சம்பவத்தன்று காலை ஈரோடு ரெயில் நிலையம் எதிரே அவருக்கு சொந்தமான ஆட்டோவை நிறுத்தியிருந்தார்.

பின்னர் அவர் டீ குடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஒரு வாலிபரை அவரது ஆட்டோவை ஓட்டி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சுந்தரம் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆட்டோவின் எண்ணை வைத்து ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். மொடக்குறிச்சியில் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் (26 )என்பது தெரியவந்தது. ஈரோடு மூலபட்டறையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

விக்னேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com