முசிறி அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலி- டிரைவர் கைது

முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
முசிறி அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலி- டிரைவர் கைது
Published on

முசிறி:

ஈரோடு மாவட்டம், வீரப்ப சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கார்த்திக் (23). கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சமயபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். 

அப்போது திருச்சி- நாமக்கல் சாலையில் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தைகைப் பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து காரைக்குடியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடாசலம் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com