பேட்டையில் லோடு ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி பலி

பேட்டையில் இன்று காலை பால் வாங்க சென்ற கூலித்தொழிலாளி லோடு ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார்.
பேட்டையில் லோடு ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி பலி
Published on

நெல்லை:

பேட்டை நேருஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகத்தேவர் (வயது60) கூலித்தொழிலாளி. இன்று காலை பால் வாங்குவதற்காக தீன்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ அவர் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர் கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com