பாகூர் அருகே மரத்தில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி

பாகூர் அருகே மரத்தில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர் அருகே மரத்தில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி
Published on

பாகூர்:

பாகூர் அருகே இருளன் சந்தை கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முள்ளோடை ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அருள்ராஜ் (23) என்பவர் அங்கு வந்தார். இதை தொடர்ந்து இருவரும் ஆட்டோவில் பாகூர்- பரிக்கல்பட்டு ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த மாமரத்தில் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் உடல் நசுங்கி இறந்து போனார். அருள்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com