கொம்பாக்கத்தில் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் மரணம்

கொம்பாக்கத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் மருந்துக்கு பதிலாக பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொம்பாக்கத்தில் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் மரணம்
Published on

புதுச்சேரி:

புதுவை கொம்பாக்கம் செங்கேணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). ஆட்டோ டிரைவர்.

இவருக்கு மீனா (36) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்ததால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தன்று லட்சுமணன் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் தான் ஆஸ்பத்திரியில் வாங்கி வைத்திருந்த மருந்தை எடுத்து குடிக்க முயன்றார்.

அப்போது அருகிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்தார். இதில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்தார்.

அப்போது உறவினர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.

இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com