

சிங்கை:
சிங்கை காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது36). இவருக்கு நம்பியம்மாள் என்ற மனைவியும், ரோஷினி (8) என்ற மகளும் உள்ளனர். இசக்கியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.
இதனால் அவரது மனைவி நம்பியம்மாள் அவரிடம் கோபித்து கொண்டு தாய் வீடான மூன்றடைப்பு அருகே உள்ள கருப்புக்கட்டிக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கியப்பன் கடந்த சரஸ்வதி பூஜையன்று தனது ஆட்டோவுக்கு பூஜை போட்டார்.
பின்னர் வீட்டிற்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இசக்கியப்பனை ஆட்டோ ஸ்டாண்டில் காணாமல் அவரது நண்பர்கள் வீட்டிற்கு தேடி வந்தனர். அப்போது வீட்டில் இசக்கியப்பன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி சிங்கை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சிங்கை இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.