திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 38) இவர் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நுழைவுவாயில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இதே இடத்தில் தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாஸ்கர் (32) என்பவரும் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவர்களிடையே ஆட்டோ ஓட்டுவது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டபோது ஆனந்த் பாஸ்கரை தாக்கியுள்ளார். இதனால் பாஸ்கர் ஆனந்த் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11.35 மணிக்கு ஆனந்த் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பாஸ்கர் பெரிய கத்தியுடன் அங்கு வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென ஆனந்தின் முதுகு கழுத்து தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த ஆனந்த் தரையில் விழுந்து துடிதுடித்தார். பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆனந்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பாஸ்கரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com