மதுரை வண்டியூர் அருகே ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை

மதுரை வண்டியூர் அருகே முட்புதருக்குள் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஆனந்தன்
ஆனந்தன்
Published on

மதுரை:

மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவரது மகன் ஆனந்தன் (வயது 26), ஆட்டோ டிரைவர். நேற்று மாலை இவர் வண்டியூர் பகுதியில் உள்ள தியேட்டரின் பின் பகுதியில் முட்புதருக்குள் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2012-ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் 50 ரூபாய்க்காக காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் ஆனந்தன் மீது உள்ளது. நேற்று ஆனந்தன் உள்ளிட்ட சிலர் ஆட்டோவில் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் முட்புதருக்குள் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆனந்தன் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் வந்து யார், யார் மது அருந்தினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான் ஆனந்தன் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com