ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்

போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஓட்டிய பஸ்சால் விபத்து ஏற்பட்டது. இதில் வாலிபர் ஒருவர் காயம் அடைந்தார்.
ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்
Published on

நாகர்கோவில்:

போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலர் கனரக வாகனங்களை இயக்க அதிக அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் விபத்துக்களும் ஏற்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு ஆரல்வாய்மொழி வழியாக ஊரல்வாய்மொழிக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது. அந்த பஸ் 12.20 மணியளவில் ஆரல்வாய்மொழியில் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நடந்து சென்ற அழகியநகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த விபத்தை பார்த்ததும், அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அரசு பஸ்சை ஓட்டியவர் தற்காலிக டிரைவர் என்பது தெரிய வந்தது. ஆட்டோ டிரைவரான இவரிடம் கனரக வாகனம் ஓட்டுவதற்கான லைசென்சு இருந்ததால் தற்காலிக ஓட்டுனர் பணிக்கு நியமித்துள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இயக்கிய பஸ் விபத்தில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com