பெரம்பலூர் அருகே ஆட்டோ மோதி காவலாளி பலி

பெரம்பலூர் அருகே ரோட்டை கடக்க முயன்ற காவலாளி மீது ஆட்டோ மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் அருகே ஆட்டோ மோதி காவலாளி பலி
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52). இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை தண்ணீர் பந்தல் பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக  வந்த ஷேர் ஆட்டோ கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, ஷேர் ஆட்டோ டிரைவர் புதுக்குறிச்சியை சேர்ந்த சுரேசை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com