சேந்தமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து நகராட்சி ஊழியர் பலி

சேந்தமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நகராட்சி ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 26). இவர் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முத்துகாபட்டி அருகே உள்ள பெரியசாமி கோவிலுக்கு ஆட்டோவில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். பின்னர் தரிசனம் முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் அந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் போலீசுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com