உசிலம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் படுகாயம்

வயல் வேலைக்குச் சென்ற பெண்கள், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலத்த 7 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த சில பெண்கள் இன்று காலை ஷேர் ஆட்டோவில், செல்லம்பட்டி பகுதி வயல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

உசிலம்பட்டியில் உள்ள தி.விலக்கு பகுதியில் ஆட்டோ சென்றபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது.

ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டனர்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பு (வயது 65) பூங்கொடி, பழனியம்மாள், பெரிய கருப்பி, கருப்பாயி, செல்லம்மாள், பாசம்மாள் ஆகிய 7 பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சிலர் லேசான காயத்துடன் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டனர்.

விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com