

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முதல் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. பாபர் அசாம் 43 ரன்னுடனும், யாசிர் ஷா 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் பாலோ-ஆனை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சதத்தை நோக்கிச் சென்ற பாபர் அசாம் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பிரிஸ்பேனில் டெஸ்டில் பாபர் அசாம் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.