ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியா சாம்பியன்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி தொடரை வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டீம் இந்தியாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
டீம் இந்தியாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on

இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.

கடந்த 1988-ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

அதில் ‘‘ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றி குறித்து நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. எதிர்காலத்திலும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com