இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இருந்து பிஞ்ச் விலகல்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக 4-வது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். #AUSvENG #Finch
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இருந்து பிஞ்ச் விலகல்
Published on

முதல் இரண்டு போட்டியிலும் சதமும், 3-வது போட்டியில் அரைசதமும் அடித்து நல்ல ஃபார்மில் இருந்தவர் ஆரோன் பிஞ்ச். 4-வது போட்டிக்கு தயாராகும்போது ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் அவதிப்பட்டார்.

இதனால் நாளைய நான்காவது போட்டியில் இருந்து விலகியுள்ளார். உடற்தகுதி பெற்றால் ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் நடைபெறும் கடைசி போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. பிஞ்ச் விலகியுள்ளதால் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்படும்போது மேக்ஸ்வெல்லுக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘மெக்ஸ்வெல் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அணியில் இடம் கிடைக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com