லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்தல் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 454 ரன்கள் குவிப்பு

சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் லாபஸ்சாக்னே இரட்டை சதம் அடித்து அசத்த, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 454 ரன்கள் எடுத்துள்ளது.
இரட்டை சதமடித்த லாபஸ்சாச்னே
இரட்டை சதமடித்த லாபஸ்சாச்னே
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டேவிட் வார்னர் - லாபஸ்சாக்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

வார்னர் 45 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்தார். அவர் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பொறுப்புடன் ஆடிய லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்தினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 150 ஓவரில் 454 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லாபஸ் சாக்னே 215 ரன்னில் வெளியேறினார்.

நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதியில், நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 26 ரன்னுடனும், டாம் பிளெண்டல் 34 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com